பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி தேரோட்டம்; பேரூரா, பட்டீசா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்



தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பங்குனி உத்திர தேரோட்டம் இன்று நடப்பதால், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கும். திருக்கல்யாண உற்சவம், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, வெள்ளையானை சேவை, விநாயகர், முருகப்பெருமான், அம்பாள் ஆகியோர் வீதி உலா வருவதும் பங்குனி மாதம் 15 நாட்கள் தொடர்ந்து தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு விழா கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் காலையும், மாலையும், யாகசாலை பூஜையும், திருவீதி உலாவும் நடந்து வந்தது. நேற்றிரவு, திருக்கல்யாண உற்சவம், வெள்ளை யானை சேவை நடந்தது. ஏழாம் நாளான இன்று, காலை, 8:30 மணிக்கு, பஞ்சமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து, மாலை பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் துவங்கியது. அலங்கரிப்பட்ட சிறிய தேரில் விநாயகர் |வள்ளி தேவசேனா சுப்பிரமணியர்,  சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் தனித்தனியாக பக்தர்களுக்கு  எழுந்தருளி காட்சியளித்தனர். பெரிய தேரில் பட்டீஸ்வரர் சோமாஸ்கந்தராக தனி தேரிலும். பச்சைநாயகி அம்மன் தனி தேரிலும்  பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தேர் துவங்கும் முன்பாக தேரின் முன்புறம் பூஜைகள் நடைபெற்றது சரியாக மாலை 4.30மணியளவில் தேர் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு சிறுவாணி ரோடு அதைத்தொடர்ந்து கோவில் மேற்குரத வீதி தெற்கு ரத வீதி வடக்கு ரத வீதிகளின் வழியே தேர் நிலைக்கு வந்தடைந்தது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்