திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் யாகசாலை பூஜை துவக்கம்; ஏப்.11ல் கும்பாபிஷேகம்



திருப்புத்துார்; திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு  யாகசாலை பூஜைகள் துவங்கியது. 


தென்மாப்பட்டு பூமாயி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக 16 ஆண்டுகளுக்குப் பின் திருப்பணிகள் நடந்துள்ளது. கும்பாபிஷேகம் ஏப்.11ல் நடைபெற உள்ளது. ஏப்.7 மாலை புனிதநீர் நிறைந்த கலசங்கள் திருத்தளிநாதர் கோயிலிலிருந்து உபயதாரர் நா.ஆறு.தங்கவேலு தலைமையில் புறப்பாடாகி பூமாயி அம்மன் கோயில் வந்தது. பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் சிவாச்சார்யார்கள் புனித கலசங்களுக்கு பூஜை நடத்தினர்.தொடர்ந்து யாகசாலையில் அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜை,தன பூஜைகள் நடந்தன.


இன்று காலை 8:45 மணிக்கு கோ பூஜை, கணபதி ேஹாமம்,நவக்கிரக ஹோமம் நடந்து கலசங்கள் யாக சாலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இரவு 6:30 மணிக்கு முதற்கால யாகபூஜை துவங்கி, பூர்ணாகுதி தீபாராதனை நடக்கிறது. நாளை காலை 9:00 மணிக்கு 2ம் காலயாக பூஜையும் ,மாலை 6:00 மணிக்கு 3ம் காலயாக பூஜை நடைபெறும். நாளை மறுதினம்  காலை 9:00 மணிக்கும், மாலையில் 6:00 மணிக்கும் 4,5ம் காலயாக பூஜை நடைபெறும். ஏப்.11 அதிகாலை 5:00 மணிக்கு ஆறாம் கால யாகபூஜையும்,காலை 8:30 மணிக்கு விமான,கோபுர மகா கும்பாபிேஷகமும், காலை 8:50 மணிக்கு மூலவர் மகா கும்பாபிஷேகம் நடைபெறும். மாலை 5:00 மணிக்கு மகா அபிஷேகமும், இரவில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெறும்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்