மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் முருகனுக்கு 108 சங்காபிஷேகம்



கமுதி; கமுதி அருகே மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் முருகன் கோயிலில் சித்திரை மாத கிருத்திகை சிறப்புபூஜை நடந்தது.இதனை முன்னிட்டு அபிராமம் பாதயாத்திரை பக்தர்கள் குழு சார்பில் அபிராமம் துர்க்கை அம்மன் கோயிலில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் பக்தர்கள் பால்குடம்,காவடி,வேல்குத்தி பாதயாத்திரையாக முருகன் கோயிலுக்கு சென்றனர்.பின்பு முருகனுக்கு பாலபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.கிருத்திகை சிறப்பு பூஜையாக குமரக்கடவுள் முருகனுக்கு பால்,சந்தனம்,மஞ்சள்,பழங்கள், திரவிய பொடி உட்பட 33 வகையான அபிஷேகம் நடந்தது.பின்பு 108 சங்காபிஷேகம் நடந்தது.விழாவில் கமுதி,பரமக்குடி,அபிராமம், முதுகுளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பலரும் கலந்து கொண்டனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்