தஞ்சாவூர்; தமிழகத்தில் சந்திரகிரகணம் துவங்குவதற்கு முன் அனைத்து கோவில்களின் நடைகளும் அடைக்கப்படும். கிரகணம் முடிந்த பின், பரிகார பூஜைகள் செய்து நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அதன்படி சந்திரகிரகணத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் பெருவுடையார்கோவில் நாளை (7ம் தேதி) மாலை 4:00 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடத்தப்பட்டு, கோவில் நடை சாத்தப்படும். மீண்டும் வழக்கம் போல் மறுநாள் 8ம் தேதி காலை 6:00 மணிக்கு நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.