சங்குபேட்டை முத்துமாரியம்மன் கோயிலில் கார்த்திகை பௌர்ணமி சிறப்பு பூஜை



பெரம்பலூர்;  பெரம்பலூர் டவுன் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் கார்த்திகை மாதம் பௌர்ணமியை யொட்டி மாலை 6 மணிக்கு மகா தீபம் , மற்றும் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைப்பெற்றது.


கார்த்திகை பௌர்ணமியையொட்டி சங்குபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், தேன், இளநீர்,திருமஞ்சனம், ஜவ்வாது,  உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, முத்துமாரியம்மனை வன்ன மலர்களால் அலங்கரித்து, சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகள் செய்து பெண்கள், மற்றும் பொதுமக்கள் வழிபட்டனர். கார்த்திகை பௌர்ணமியையொட்டி உலக நன்மைக்காகவும், பருவ மழை தவறாமல் பெய்து, தன தானியம் பெருகிடவும், பொதுமக்கள் நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டி பொதுமக்கள் பிரார்த்தனை செய்தனர். அன்னதான குழுவினர் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு அபிஷேக பொருட்கள், மற்றும் அன்னதானம் ஏற்பாடு செய்திருந்தனர். இங்கு மாதம் தோறும் வரும் அம்மாவாசை, பெளர்ணமி நாட்களில் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்று வருகிறது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்