அரவிந்தர் 75 ஆம் ஆண்டு நினைவு நாள்; பக்தர்கள் தரிசனம்



புதுச்சேரி; மகான் அரவிந்தரின் 75 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது அறை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது.


கிருஷ்ணா தனகோஷ்- ஸ்வர்ணலதா தம்பதிகளின் மகனாக 1872 ஆம் ஆண்டு ஆக.15 ஆம் தேதி கொல்கத்தா நகரில் மகான் அரவிந்தர் பிறந்தார். விடுதலைப் போராட்ட வீரராக இருந்து, 1910 ஆம் ஆண்டு ஏப். மாதத்தில் புதுச்சேரிக்கு வந்த அவர் ஆன்மீக வாழ்வியலில் ஈடுபட்டார். 1950 டிசம்பர் 5ஆம் தேதி புதுச்சேரி ஆசிரமத்தில் இயற்கை எய்தினார். அவரது மறைவு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் மகா சமாதி தினமாக புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதை யொட்டி இன்று 75ஆம் ஆண்டு மகா சமாதி தினம் நினைவு நாளை முன்னிட்டு ஆசிரமாவாசிகளின் கூட்டு தியானம் அதிகாலை நடந்தது. அதனைத் தொடர்ந்து காலை 6 மணி முதல் 10 மணி வரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று அரவிந்தர் அறை மற்றும் சமாதியை தரிசனம் செய்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்