திருப்பதியில் டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை வி.ஐ.பி தரிசனம் ரத்து!



திருப்பதி; திருமலை திருப்பதி தேவஸ்தானம்  டிசம்பர் 2025 மற்றும் ஜனவரி 2026 ஆகிய மாதங்களில் வரும் முக்கியப் பண்டிகைகளையொட்டி, குறிப்பிட்ட நாட்களில் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தை ரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவதைக் கருத்தில் கொண்டும், உற்சவங்களைச் சிறப்பாக நடத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 23கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்,டிசம்பர் 29வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய நாள், டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை (10 நாட்கள்) வைகுண்ட துவார தரிசனம், ஜனவரி 25 ரத சப்தமி விழா ஆகிய நாட்களில்தான் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட ரத்து செய்யப்பட்ட நாட்களுக்கு முந்தைய நாட்களில்  நெறிமுறை வி.ஐ.பி-கள்  தவிர்த்து, மற்ற பக்தர்களின் வி.ஐ.பி பிரேக் தரிசனத்திற்கான பரிந்துரைக் கடிதங்கள்  ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. பக்தர்கள் இந்த மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு, தேவஸ்தான நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்