தேவகோட்டை: தேவகோட்டை சபரி சாஸ்தா பஜனை பீடத்தில் அய்யப்பன், விநாயகர், மஞ்சள் மாதா, மகாலட்சுமி , கருப்பர், சுப்பிரமணியர் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. வேத விற்பன்னர்கள் வழிநடத்த 360 பெண்கள் விளக்கேற்றி சுவாமிகளை திரு விளக்கு பூஜை செய்து வழிபட்டனர். குருசாமி பொன்ராஜ் அம்மன் அலங்காரம் செய்யப்பட்ட குத்துவிளக்கில் விளக்கேற்றி விளக்கு பூஜையை தொடங்கி வைத்தார். சபரி சாஸ்தா பஜனை குழுவை சேர்ந்தவர்கள் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தனர். விளக்கு பூஜையை தொடர்ந்து பக்தர்கள் அய்யப்பன் பாடல்கள் பாடி வழிப்பட்டனர்.