சபரிமலைக்கு தங்க அங்கி பவனி புறப்பட்டது: மண்டல பூஜைக்கு இனி நான்கு நாட்கள் மட்டுமே..!

டிசம்பர் 23,2025



சபரிமலை; மண்டல பூஜைக்காக ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி பவனி இன்று காலை சரண கோஷ முழக்கங்களுடன் புறப்பட்டது.


1973 - ல் திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா ஐயப்பனுக்கு 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார். இது ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அங்கி அணிவித்துதான் ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும். வரும் 27 காலை 10.10 முதல் 11.30 - க்கு இடையிலான முகூர்த்தத்தில் மண்டல பூஜை நடைபெறுகிறது. இதற்காக இன்று காலை ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி பவனி புறப்பட்டது. அதிகாலை 5:00 மணி முதல் கோயில் முன்புறம் இந்த அங்கி பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட கியூவில் நின்று தரிசனம் நடத்தினர். தொடர்ந்து காலை 6:00 மணிக்கு அங்கி எடுத்து வரப்பட்டு சபரிமலை கோயில் மாதிரியில் வடிவமைக்கப்பட்டிருந்த ரதத்தில் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டது. இன்று ஓமல்லூர் ரத்த கண்ட சுவாமி கோயிலில் தங்கியது. நாளை கோந்நி முருங்கமங்கலம் கோயிலிலும், நாளை பெருநாடு சாஸ்தா கோவிலிலும் தங்கும் பவனி 26- ம் தேதி மதியம் பம்பை வந்தடையும் . இங்கு பம்பை கணபதி கோயில் முன்பு பக்தர்களின் தரிசனத்திற்கு வைத்த பின்னர் மாலை 3:00 - க்கு தலைசுமடாக சன்னிதானம் கொண்டுவரப்பட்டு ஶ்ரீகோயிலில் ஒப்படைக்கப்படும். தொடர்ந்து மாலை 6:30 -க்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறும். 27 -ம் தேதி நடைபெறும் மண்டல பூஜையின் போதும் ஐயப்பன் விக்ரகத்தில் தங்க அங்கி அறிவிக்கப்பட்டிருக்கும். அன்று இரவு 11:00 மணிக்கு நடை அடைப்பதுடன் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் சபரிமலையில் நிறைவு பெறும்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்