புல் மேடு பாதையில் தினமும் 1000 பேருக்கு ஸ்பாட் புக்கிங்; பெருவழி பாதைக்கு சிறப்பு பாஸ் இல்லை

டிசம்பர் 20,2025



சபரிமலை; புல்மேடு பாதையில் தினமும் ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங் வழங்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது. அழுதை பாதையில் சிறப்பு பாஸ் வழங்கும் திட்டம் தற்போது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆன்லைன் முன்பதிவு கிடைக்காத தமிழக - கேரள பக்தர்கள் புல் மேடு பாதையை தேர்வு செய்து வருகின்றனர். இதனால் இந்த பாதையில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் மற்றும் முதியவர்களை அழைத்து வரும்போது இந்த பாதையில் வருவது சிரமமாக உள்ளது. பல நேரங்களிலும் காட்டில் சிக்கியவர்களை மீட்டு வர தீயணைப்பு மற்றும் மத்திய அதிவிரைவுப்படை, பேரிடர் மீட்பு குழுவினர் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.  இந்த பாதை இயற்கை வனப்பு நிறைந்த பகுதி என்பதால் ஏராளம் பேர் இந்த பாதையை தற்போது தேர்வு செய்து வருகின்றனர்.புல் மேடு மட்டுமல்ல, செங்குத்தான ஏற்றம் இறக்கம் என 16 கிலோமீட்டர் தூரம் உள்ளது. எனவே வயது முதிர்ந்த மற்றும் சிறு வயது பக்தர்கள் இந்த பாதையில் வர வேண்டாம் என்று தேவசம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது. முழுஉடல் திறன் உள்ளவர்கள் மட்டும் இந்தப் பாதையை தெரிவு செய்யலாம். இந்தப் பாதையில் இனி வரும் நாட்களில் தினமும் 1000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங் கூப்பன் வழங்கப்படும். எருமேலியிலிருந்து அழுதை வழியாக வரும் பெருவழிப்பாதையில் வரும் பக்தர்களுக்கு சிறப்பு பாஸ் வழங்கப்படுவதாக வெளியாகும் செய்திகள் தவறானது. அப்படி ஒரு பாஸ் தற்போது வழங்கப்படவில்லை. இந்த பாதையில் வருபவர்களுக்கு சிறப்பு பாஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. என்றாலும் கேரள உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி இறுதி முடிவுஎடுக்கப்படும் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்