குன்னுாரில் மாலை அணிந்த செவ்வாடை பக்தர்கள்



குன்னுார்: குன்னுாரில் மேல் மருவத்துார் ஆதிபராசக்தி பக்தர்கள், கோவில் தைப்பூச இருமுடிக்கு மாலை அணிந்தனர்.


நீலகிரி மாவட்டத்தில் இருந்து ஆண்டுதோறும். டிச., ஜன., மாதங்களில் செவ்வாடை பக்தர்கள் மேல்மருவத்துாருக்கு மாலை அணிந்து இருமுடி எடுத்து செல்கின்றனர். இந்நிலையில், குன்னூர் ரேலி காம்பவுண்ட் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில், சிறப்பு வழிபாடுகளுடன் ஏராளமானோர் விரதம் துவக்கி மாலை அணிந்துள்ளனர். மன்ற தலைவி பிரபாவதி தலைமையில் வரும், 22ம் தேதி வரை இங்கு மாலை அணியும் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த குழுவினர் வரும், 23ம் தேதி புறப்பட்டு, 26ம் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்