சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் மண்டல பூஜை



ஆண்டிபட்டி; சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான மண்டல பூஜை நடந்தது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் பல லட்சம் செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு டிசம்பர் 1ல் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்திற்குப் பின் கோயிலில் தொடர்ந்து 48 நாட்கள் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. 48 நாட்கள் நிறைவுக்குப் பின் இன்று நடந்த மண்டல பூஜையில் புனிதநீர்க் குடங்கள் வைத்து யாகம் வளர்த்து பூஜைகள் செய்தனர். தீர்த்த குடங்களை கோயில் வளாகத்தில் சுமந்து சென்று அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்தனர். நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் சுந்தரி, கோயில் ஆய்வாளர் தனலட்சுமி, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் ராமர், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் லோகிராஜன், அரசு முதல் நிலை ஒப்பந்ததாரர் அருள் மாணிக்கம், தன்னார்வலர் சேட்டு பரமேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்