கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா : ஏற்பாடுகள் தீவிரம்



பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் மற்றும் தேர் திருவிழா மார்ச் மாதம் நடைப்பெறுகிறது. விழாவையொட்டி, மார்ச் மாதம் மூன்றாம் தேதி செவ்வாய் கிழமை மாலை சகுனம் விநாயகர் கோவிலில் சகுனம் கேட்டல், 20 ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை தேர் முகூர்த்தகால் நடல், 25 ம் தேதி புதன் கிழமை இரவு கொடியேற்றம், உள்ளிட்டவை நடைப்பெற்றது.  29 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் நீர் மற்றும் வசந்தம் பொங்கல் வைத்தல், 30 ம் தேதி திங்கட்கிழமை மதியம் குண்டம் திறந்து பூ போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 31 ம் தேதி செவ்வாய் கிழமை அதிகாலை 3:00 மணிக்கு வீர மக்கள் குண்டம் இறங்குதல், அன்று மாலை 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்ரல் மாதம் 4 ம் தேதி சனிக்கிழமை மகா தரிசனத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன், அறங்காவலர் குழு தலைவர் மனோகரன், அறங்காவலர்கள் சுந்தர முத்து, திருமூர்த்தி, பானுமதி, ஜெகநாதன், உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்