தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்



வேடசந்துார்: வேடசந்துார் நாகம்பட்டி கோயில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நாகம்பட்டி மகாலட்சுமி, மாமுடி, சென்னப்பன், மல்லம்மாள், கருப்பசுவாமி கோயிலில் ஜூன் 5ல் துவங்கிய திருவிழாவையொட்டி பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை ஆரம்பித்தனர். தொடர்ந்து கரகம் பாலித்து சேர்வை ஆட்டத்துடன் சுவாமிகள் ஊர்வலமாக கோயிலுக்கு வர சிறப்பு பூஜைகள் நடந்தன.

குழந்தை வரம், தொழில் வளம், விவசாயம் செழிக்க வேண்டி விரதம் இருந்த பக்தர்கள் கோயில் முன் வரிசையாக அமர்ந்தனர்.

கோயில் பூஜாரி ஆணிகளுடன் கூடிய காலணி அணிந்து அவர்களுக்கு ஆசி வழங்கினார். பின்னர் பக்தர்கள் தலையில் பூஜாரி தேங்காய் உடைக்க நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்வினோத வழிபாட்டில் சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்