வழித்துணை வராஹி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு வழிபாடு



கடலுார்: பூங்குணம் கிராமத்தில் உள்ள வழித்துணை வராஹி அம்மன் கோவிலில் பஞ்சமி சிறப்பு வழிபாடு நடந்தது.

பண்ருட்டி அடுத்த பூங்குணம் கிராமத்தில் உள்ள வழித்துணை வராஹி அம்மன் கோவிலில் வைகாசி மாத தேய்பிறை பஞ்சமி திதி சிறப்பு வழிபாடு நேற்று முன்தினம் மாலை நடந்தது.

பஞ்சமி திதியையொட்டி வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு ஹோமம், சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்