ஸ்ரீரங்கப்பட்டினம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்



மாண்டியா ; ஸ்ரீரங்கப்பட்டினம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சபேச குருக்கள் தலைமையில் ராஜ கோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

தமிழகம் திருச்சிராப்பள்ளி காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீசமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் போன்று, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணாவின் பாபுராயனகொப்பலுவில் காவிரி நிதிக்கரையில் ஸ்ரீசமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, ஸ்ரீஸ்ரீஸ்ரீ திருச்சி ஞானதேசிக மஹா சுவாமிகள் ஆசிர்வாதத்துடனும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெயேந்திர புரி மஹா சுவாமிகள் தலைமையில், ஸ்ரீ சதாசிவபுரி பகவத்பாதாச்சார்ய சுவாமி ஸ்ரீ சுரேஷ்வர ஆச்சார்யா சங்கல்பத்தின்படி, கடந்த 18 ம் தேதி கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. முதல் கால பூஜை 22ம் தேதி மாலையும், 23ல் இரண்டு கால பூஜைகள் நடந்தன. காலை முதல் இரவு வரை சிறப்பு சாந்தி, யாக பூஜை, ஹோமம், வேத பாராயணம், பூர்ணாஹூதி, தீபாராதனையும் நடந்தது. பல்லக்கில் உற்சவர் சமயபுரம் மாரியம்மன் பவனி வந்து அருள்பாலித்தார். யாக குண்டங்கள் அமைத்து பூஜை

நேற்று சிறப்பு சாந்தி, யாக பூஜை, ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, ரத்ன நியாசம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல்; மாலையில் சிறப்பு சாந்தி, யாக பூஜை, லட்சுமி பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, ரக் ஷா பந்தனம், அம்மன் நேத்ரம் உம்மீலனம் எனும் கண்கள் திறப்பு, பிம்மசுத்தி நடைடெற்றது. தொடர்ந்து இன்று நாளை அதிகாலை 5:00 மணிக்கு யாக சாலை பூஜை, ஹோமம், நாடி சந்தனம், ஸ்பர்ஷாஹூதி, பிராயச்சித்தாஹூதி, மஹா பூர்ணாஹூதி, மூர்த்தி சமயோஜனம் நடைபெற்று கலசம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து காலை 9:45 முதல் 10:30 மணிக்குள், மயிலாடுதுறையை சேர்ந்த 92 வயதுள்ள சபேச குருக்கள் தலைமையில் விமான, ராஜகோபுரம் மஹா கும்பாபிஷேகம், மூலஸ்தானங்கள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்