உத்திரமேரூர்: அரும்புலியூர் படவேட்டம்மன் கோவிலில், பால்குட ஊர்வலம் விமரிசையாக நடந்தது.
அரும்புலியூர் காலனியில் படவேட்டம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆனி மாதம் விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டிற்கான விழாவையொட்டி, இன்று காலை அப்பகுதியில் உள்ள கெங்கைய்மன் கோவில் வளாகத்தில் இருந்து, பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக படவேட்டம்மன் கோவில் வந்தடைந்தனர். பின், அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து, அரும்புலியூர் கெங்கையம்மன் கோவில் விழாவிற்கான காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அபிஷேகமும், நாளை கெங்கையம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.