கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் துர்கை அம்மனுக்கு ராகு கால பூஜை



கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் துர்கைம்மனுக்கு ராகு கால சிறப்பு பூஜை நடந்தது.

துர்கை அம்மனை வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதன்படி கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள துர்கையம்மனுக்கு ராகு கால சிறப்பு பூஜை இன்று நடந்தது. துர்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பெண் பக்தர்கள் பங்கேற்று லலிதா சகஸ்ரநாம மந்திரம் வாசித்து, நெய் தீபம் ஏற்றி, எலுமிச்சை மாலை அணிவித்து, அம்மனை தரிசனம் செய்தனர். வழிபாடுகளை கோவில் அர்ச்சகர் துரைசாமி குருக்கள் செய்திருந்தார்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்