அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் கிருத்திகை பூஜை; தங்க தேரோட்டம்



அன்னுார்: கிருத்திகையை முன்னிட்டு, அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் இன்று தங்க தேரோட்டம் நடந்தது.

அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், ரூ.2.50 கோடியில் புதிதாக தங்கத்தேர் உருவாக்கப்பட்டது. பிப்., 1ம் தேதி தேரோட்டம் துவங்கியது. ஒவ்வொரு மாதமும் கிருத்திகையன்று தேரோட்டம் நடக்கிறது. இன்றிரவு 7:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். கல்யாணசுப்பிரமணியசாமிக்கு, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சிங்கப்பெண் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்