அவிநாசி: ஜகன் மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் மற்றும் ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் கோவிலில் ஆஷாட நவராத்திரி என்கின்ற வாராஹி நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது.
அவிநாசி அடுத்த ராக்கியாபாளையம் ஸ்ரீபுரத்தில் எழுந்தருளியுள்ள ஜகன் மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் மற்றும் ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலில் ஆஷாட நவராத்திரி என்கின்ற வாராஹி நவராத்திரி விழா கடந்த 15ம் தேதி முதல் இன்று வரை 9 நாட்களுக்கு நடைபெற்றது. இதில் இன்று வாராஹி ஹோமம், பூர்ணாஹீதி, அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை ஆகியவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.