அவிநாசியில் கட்டணம் இல்லா ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம்



அவிநாசி: அவிநாசி கோவம் திருமண மண்டபத்தில் கட்டணமில்லா ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.


அவிநாசி வடக்கு ரத வீதியில் உள்ள கோவம்ச திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கோவம்ச ஆண்டி பண்டாரத்தார் சமூக முன்னேற்ற நலச்சங்கம் மற்றும் அவிநாசி கோவம்ச சமூக திருமண மண்டப அறக்கட்டளை இணைந்து நடத்தும் கட்டணமில்லா ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம் பண்ணவாடி ஸ்ரீ பரமேஸ்வரர் திருமடம் சிவஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமிகள் தலைமையில் கடந்த 20ம் தேதி முதல் இன்று வரை 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த பயிற்சி முகாமில் மாநில தலைவர் பிரகாசம் தலைமையில்,அவிநாசி கோவம்ச திருமண மண்டப அறக்கட்டளை செயலாளர் சுப்ரமணியம் வரவேற்றார். திருமண மண்டப தலைவர் வேலுசாமி, பொருளாளர் கணேசன், மாநில பொருளாளர் தங்கவேல், மாநில செயல் தலைவர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவம்ச மாநில இளைஞர் அணி தலைவர் தங்கத்தமிழ் செல்வன், மாநில இணை செயலாளர் சிவராமன் ஆகியோர் நேற்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். நிறைவு நாளான இன்று கூனம்பட்டி ஆதீனம் ஸ்ரீ மாணிக்கவாசகர் மடாலயம் ஸ்ரீலஸ்ரீ நடராஜ சுவாமிகள், அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய ஆதீனம் ஸ்ரீ காமாட்சி தாச சுவாமிகள் மற்றும் ராமேஸ்வரம் ஹரி சிவனடியார் திருமடாலயம் ஸ்ரீலஸ்ரீ அகோர சிவம் கணேச சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்