மேட்டுப்பாளையம் ; ஆடி மாதம் இரண்டாம் வெள்ளி க்கிழமை முன்னிட்டு மேட்டுப்பாளையம் சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள தேவி கருமாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் பால் தயிர் நெய் இளநீர் மஞ்சள் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் நடந்தது.தொடர்ந்து நூற்றுக்கணக்கான வளையல்கள் மாலையாக கோர்த்தும் அம்மனுக்கு விபூதியால் திருமுக மண்டலத்தில் அலங்காரமும் பச்சை புடவை உடுத்தி மல்லிகை பூ அலங்காரத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை வெள்ளிங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளையின் சார்பில் தலைவர் செல்வராஜ், செயளாலர் முருகேசன் பொருளாளர் மூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.