திருவாரூர்: தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான விளமல், மதுரபாஷினி சமேத பதஞ்சலி மனோகர் கோயிலில் ஆடிப்பூர உற்சவ பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. சக்தி பீடங்களில் ஸ்ரீவித்தியா பீடமாக அம்பிகை மூலாதார ஷேத்திரத்தில் சிவசக்தியாய் நின்று ஆதி அம்பிகை சகல சவுந்தர்ய, சவுபாக்கியம் அருளும் தேவிக்கு ஆடிப்பூர பெருவிழா நடைபெறுகிறது. சக்தி பீடங்களில் ஸ்ரீ வித்தியா பீடமாக அம்பிகை மூலாதார ஷேத்திரத்தில் சிவசக்தியாய் நின்று சகல சவுந்தர்ய, சவுபாக்கியம் அருளும் தேவியாய், முடியா பிறவியை முடித்து அருளும் அன்னைக்கு இன்று ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. மதுரபாஷினி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நடந்த வழிபாட்டில் கோயில் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.