ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று, கோவில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன.
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் காசிவிஸ்வநாதன் சன்னதியில் எழுந்தருளியுள்ள விஷ்ணுதுர்க்கை அம்மனுக்கு, ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையான நேற்று காலை, 10:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், 11:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
வால்பாறை எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜையும், 7:00 மணிக்கு அபிேஷக பூஜையும், அதனை தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கிணத்துக்கடவு *கிணத்துக்கடவு மாமாங்கம் பத்ரகாளியம்மன் கோவிலில், இரண்டாம் ஆடி வெள்ளியான நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. இதில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
* சிங்கராம்பாளையம், மாகாளியம்மன் கோவிலில், நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள், தீபாராதனை உள்ளிட்டவைகள் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. –நிருபர் குழு–