மேலப்பெருங்கரை சதுரங்கநாயகி அம்மன் கோயில் கொடியேற்றம்



பரமக்குடி: பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை கிராமத்தில் சதுரங்க நாயகி அம்மன் மற்றும் சந்தன கருப்பு சுவாமி கோயிலில் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயிலில் நேற்று காலை 7:35 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து விரதம் இருக்கும் பக்தர்கள் காப்பு கட்டி கொண்டனர். தினமும் கோயிலில் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. ஆக., 2 மாலை குத்து விளக்கு வழிபாடு நடக்கிறது. ஆக., 3 பால் குடம் எடுத்தல், அக்னி சட்டி வைபவம் மற்றும் பக்தர்கள் பூக்குழியில் இறங்க உள்ளனர். தொடர்ந்து ஆக.,4 இரவு பாலபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துள்ளனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்