அழகர்கோவிலுக்கு மாடு வண்டி பயணம் செல்லும் பக்தர்கள்



திருப்புத்தூர்; திருப்புத்தூர் வழியாக அழகர்கோயிலுக்கு குலதெய்வ வழிபாட்டிற்காக பகதர்கள் மாடு வண்டிகளில் பாரம்ரியமாக பயணம் சென்றனர்.

காரைக்குடி பகுதி கோட்டையூர் வேலங்குடி மற்றும் சுற்றியுள்ள 18 கிராம நாட்டார்களின் உறவின்முறையார்கள் பல தலைமுறைகளாக பாரம்பரியமாக மாட்டுவண்டியில் அழகர்கோவிலுக்கு சென்று அங்குள்ள குலதெய்வத்தை வணங்கி வருகின்றனர். வாகனங்கள் இல்லாத காலத்தில் மாடு வண்டியில் பயணம் சென்ற இவர்கள் தற்போதும் அதை மாற்றாமல் பாரம்பரியமாக மாடு வண்டிகளில் பயணம் செய்வதை தொடர்கின்றனர். இந்த ஆண்டிற்கான பயணத்தை வேலங்குடி பிள்ளையார்கூடத்திலிருந்து ஜூலை25ல் 20 மாடு வண்டிகளில் புறப்பட்டனர்.  முதல்நாள் பயணமாக வேலங்குடியிலிருந்து குன்றக்குடி வழியாக திருப்பத்தூர் வந்தனர். திருப்புத்தூர் அருகே  எஸ்.எஸ்.கோட்டையில் இரவு தங்கி பயணத்தை தொடர்ந்தனர். நேற்று மேலூரில் தங்கினர். இன்று அழகர்கோவில் சென்று தீர்த்தமாடுகின்றனர். நாளை நேர்த்திக்கடனளாக கிடாவெட்டு நிகழ்த்தி அனைவருக்கும் அன்னதானம் வழங்குகின்றனர். பின்னர் ஜூலை 29 ல் நடைபெறும் தேரோட்டத்தில் பங்கேற்கின்றனர். பின்னர் மீண்டும் மாட்டு வண்டிப் பயணத்தை துவங்குகின்றனர். பயணம் செல்பவர்கள் கூறுகையில்,‛ நிதானமான இந்த பயணம் நாம் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை அசைபோட வைக்கிறது.அடுத்து எப்படி வாழ வேண்டும் என்பதை  நினைக்க வைக்கிறது. இயந்திர உலகத்தில் நிதானமாக சிந்திக்க உதவுகிறது. இது இறைவனுக்கு செய்யும் கடமையாகவும், எங்கள் முன்னோர்களுக்குச் செய்யும் மரியாதையாகவும் பின்பற்றி வருகிறோம்’ என்றனர். 

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்