பரமக்குடி: பரமக்குடி நகராட்சி அருகில் உள்ள வராகி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை ராகுகால பூஜை நடந்தது. கோயிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இன்று காலை பெண்கள் மஞ்சள் அரைத்து கொடுத்து வழிபட்டனர். இதேபோல் சாத்தாயி அம்மன் கோயிலில் அபிஷேகம் நடந்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.