ஒரே நாளில் நெல்லை அவித்து அரிசியாக்கி, படையலிட்டு காளியம்மனுக்கு சிறப்பு பூஜை



கடலாடி; பல நூற்றாண்டு காலமாக அம்மனுக்கு ஒரே நாளில் நெல்லை அவித்து அரிசியாக்கி படையலிடும் நிகழ்ச்சி இன்று நடந்தது.


கடலாடி அருகே ஏ.புனவாசல் கிராமத்தில் ஆவாரங்காட்டு காளிஅம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் இன்று மதியம் 3:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை 600க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி தனித்தனியாக சமையல் செய்து அம்மனுக்கு வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பூஜையில் பங்கேற்ற பெண்கள் கூறியதாவது: பல நூற்றாண்டுகளாக இந்த சம்பிரதாயத்தை கடைப்பிடித்து வருகிறோம். விவசாயத்தில் அறுவடை செய்யும் பொழுது காளியம்மனுக்காக தனியாக படையல் செய்வதற்கு நெல்லை பிரித்து வைத்து விடுவோம். நெல்லை அவித்து அவற்றை திருகை அல்லது உரலில் வைத்து குத்தி உமி தனியாக அரிசியாக பிரித்து விடுவோம். அன்றைய தினமே அரிசியை கொண்டு பொங்கல் வைக்கவும், முட்டையிடும் பருவத்தில் உள்ள நாட்டுக்கோழியை அம்மனுக்கு பலியிட்டு அதில் அசைவ உணவிற்கான படையலுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. மிஞ்சிய உணவை வீட்டுக்கு கொண்டு செல்ல கூடாது. 600 முட்டையிடும் பருவத்தில் உள்ள கோழிகள் மற்றும் ஆட்டு கிடாய்கள் பலியிடப்பட்டது. மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் கூட்டு வழிபாடு செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை செய்யப்படுகிறது என்றனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்