கோவை அருள்மிகு தண்டபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா



கோவை சௌரிபாளையம் கௌமார மடாலயம் சிரவை   ஆதீனத்திற்கு உட்பட்ட அருள்மிகு தண்டபாணி சுவாமி கோவில்  கும்பாபிஷேக விழா ஆவணி மாதம் 13-ம் நாள் 30-08-26 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு சிரவை ஆதீனம் குரு மகா சன்னிதானம் திரு இராமானந்த குமரகுருபர மற்றும் செஞ்சேரி மலை ஆதீனம் திருநாவுக்கரசர் நந்தவனம் திருமடம் ஐந்தாவது குரு மகா சன்னிதானம் முத்துசிவராம சுவாமிகள் தங்கள் கைகளால்  கும்ப கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர்.

இதில் பேரூர் ஆதீனம் இருபத்து ஐந்தாம் பட்டம் குரு மகா சன்னிதானம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் பழனி ஆதீனம் சாது சுவாமிகள் மடம் குரு மகா சன்னிதானம் தவத்திரு சாது சண்முக அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதையொட்டி மூலவர் முருக பெருமான் சிறப்பு அலங்காரத்துடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்வுகளின் முதல் நாள் நிகழ்வாக 28.08-2026 வெள்ளிக்கிழமை அன்று மங்கள இசையுடன் துவங்கியது. இதில் திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, கூத்த பிள்ளையார் சிலை எழுந்து நடத்த செய்தல், ஐங்கர பெருமாள் வேள்வி ஆகியன நடைபெற்றது.

தொடர்ந்து கோமாதா வழிபாடு விமான கலசம் தீர்த்தங்கள் முளைபாரி ஊர்வலம் ஐம்பூத வழிபாடு வேள்வி சாலை புறப்பாடு ஆகியன நடைபெற்றது. இரவு 7 மணி அளவில் முதற்கால வேள்வி நடைபெற்றது. இதில் 108 வகையான காய் கனி  மூலிகை பொருட்கள் ஆகிய அனைத்து வகையான பொருட்களுடன் ஹோமம் நடந்தது.

இரண்டாம் நாள் சனிக்கிழமை அன்று காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது.

தொடர்ந்து திருமஞ்சனம் காலை 8:30 மணிக்கு விமான கலசம் நிறுவுதல் அதைதொடர்ந்து இரண்டாம் கால வேள்வி நடைபெற்றது. மதியம் மூலமூர்த்திகள் சயான திவாசம் நடந்தது. மதியத்திற்கு மேல் மூலமூர்த்திகளை சயனாதி வாகம் செய்யப்பட்டது. மாலை வேல் வழிபாடு அதனை தொடர்ந்து மூன்றாம் கால வேள்வி நடைபெற்றது.

நிறைவாக கும்பாபிஷேகம் நாளான இன்று காலை 4-30 மணியளவில் மங்கள இசையுடன் திருப்பள்ளி எழுச்சி அதனை தொடர்ந்து மூலமூர்த்திகளுக்கு எண் வகை மருந்து சாத்துதல் ஆகியன நடைபெற்றது. காலை 6-15க்கு விமான கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலமூர்த்திகளான பஞ்சமுக விநாயகர் வேலாயுத சுவாமி பஞ்ச மூர்த்திகள் 63 நாயன்மார்கள் ஆகியவற்றிற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. மூல விக்கிரங்களுக்கு அபிஷேகம் நடந்தது. அனைத்து மூலவர் விக்கிரகங்களுக்கும் அலங்காரம் செய்யப்பட்டது. குரு மகா சன்னிதானங்கள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினர். இதில் கும்பாபிஷேகம் மலரை சன்னிதானங்கள் வெளியிட்டனர். இதை கோவிலை சேர்ந்த கோகுல் குமார் இராமலிங்க சுவாமிகள் ஆகிய பெற்று கொண்டனர்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்