மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வீரவசந்தராயர் மண்டபம் 8 ஆண்டுகளுக்கு பின் திறப்பு



மதுரை; மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தில் சிதலமடைந்து சீரமைக்கப்பட்ட வீர வசந்தராய மண்டபத்தின் பிரதிஷ்டை விழா நடந்தது.


மதுரை மீனாட்சி கோயிலில் 2018 பிப்.,2ல் ஏற்பட்ட தீ விபத்தில் கிழக்கு ராஜகோபுரத்தையொட்டி உள்ள வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் சிதலமடைந்தது. 8 ஆண்டுகள் புனரமைப்பு பணி நடந்தது. பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இன்று மண்டபத்தின் பிரதிஷ்டை விழா நடந்தது.தொடர்ந்து அம்மன், சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று முதல் வீரவசந்தராயர் மண்டபம்  பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படுகிறது. 17 ஆண்டுகளுக்கு பின் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வரும் செப்.,17ல் நடப்பதை முன்னிட்டு செப்.,6 முதல் கும்பாபிஷேகம் தொடர்பான பூஜைகளும், செப்.,11 முதல் 17 காலை வரை யாகசாலை பூஜையும் துவங்க உள்ளது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்