பெருநாழி பைரவர் கோயிலில் கும்பாபிஷேகம்



பெருநாழி: பெருநாழி அருகே டி.குமாரபுரத்தில் பைரவர் கோயில் உள்ளது. திருப்பணிகளுக்கு பின்னர் இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 10:00 மணிக்கு பைரவர் கோயில் விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். தொடர்ந்து மூலவருக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நடந்தது. டி.குமாரபுரம், பெருநாழி, திம்மநாதபுரம், பாப்பிரெட்டிப்பட்டி, முத்துச்செல்லையாபுரம், ராணி சேதுராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்