கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் கோகுலாஷ்டமி கோலாகலம்



கோவை; கோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


ஆவணி அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திரம் இணைந்து வரும் நாளில் கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடி வருகின்றோம். கிருஷ்ண பகவான் நள்ளிரவில் பிறந்ததாக ஐதீகம் உள்ளதால் பல கிருஷ்ணர் கோவில்களில்  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவையில் உள்ள கிருஷ்ணர் மற்றும் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் அபிஷேகம் நடைபெற்றது. வட திருப்பதி என்று அழைக்கப்படும் கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மூலவர் வெங்கடேச பெருமாள் குழலூதும் கண்ணன் கோபாலகிருஷ்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்