காளஹஸ்தியில் சுவாமி அய்யப்பன் கோயில் கட்டுப்பட்டு கும்பாபிஷேகம்



ஸ்ரீகாளஹஸ்தி; ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த தலமான ஸ்ரீகாளஹஸ்தியில்  சபரிமலை அய்யப்ப சுவாமி  தத்துவமசி சேவா சமிதி சார்பில் முதல் அய்யப்பன் கோயில் கட்டப்பட்டது. 


ஸ்ரீகாளஹஸ்திக்கு தெற்கே உள்ள கைலாச கிரில், நந்தி ஹில்ஸ் பகுதியில் நகர பக்தர்களின் பங்கேற்புடன் ஒரு புதிய அய்யப்பன் கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலின் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் சபரிமலை கோயிலின் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சிகளின் சிறப்பு விருந்தினர்களாக, சபரிமலை மண்டலத்தின் அரச வம்சாவளியைச் சேர்ந்த சுரேஷ் வர்மா மற்றும் சபரிமலையின் முன்னாள் மேல்சாந்தி பிரம்மஸ்ரீ சங்கரம் நம்பூதிரி ஆகியோர் கலந்து கொண்டனர். கோயில் வளாகத்தில் கடந்த மூன்று நாட்கள்  நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர், கோயிலின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கலசத்திற்கு கலசத்தில் இருந்த புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளின் பிரதம விருந்தினர்கள் கோயிலின் முக்கியத்துவத்தை விளக்கினர். கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலை பக்தியுடன் வழிபடப்பட்டு, சபரிமலை சடங்குகளின்படி முதல் அபிஷேகம் செய்யப்பட்டது. காலை முதல், கைலாச நகர் மலைப்பகுதி முழுவதும் ஐயப்ப பக்தர்களின் பஜனைகளாலும் பாடல்களாலும் நிறைந்திருந்தது. இந்த நிகழ்விற்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . ஸ்ரீ காளஹஸ்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  மதுசூதன் ரெட்டி மற்றும் அவரது மனைவி, சிவன் கோயில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு நகர்ப்புற ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளான  ராஜு,  கிருஷ்ணையா, முன்னாள் கவுன்சிலர் கண்டா. உதயகுமார்,  ராஜசேகர், பதான் பரீத் விஜயகுமார் ரெட்டி, ஃபரித் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்