திருப்பதி பெருமாள் திருக்கல்யாணம் பிரான்சில் கோலாகலம்: புதுவை முதல்வருக்கு அழைப்பு



பிரான்சில் நடக்கும் ஸ்ரீவாரி வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்க முதல்வர் ரங்கசாமிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டில் இயங்கி வரும் ‘ஸ்ரீ வேங்கடேஸ்வரா டெம்பிள் பிரான்ஸ்’ சங்கம் சார்பில், வரும் அக்டோபர் 18ம் தேதி ‘ஸ்ரீவாரி வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம்’ பிரான்சில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

​இவ்விழாவில், ஸ்ரீ வேங்கடேஸ்வரா டெம்பிள் பிரான்ஸ் சங்கத்தின் தலைவர் கண்ணபிரான், செயலாளர் கவுதம், பொருளாளர் இளங்கோ, செய்தி தொடர்பாளர் உதயா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தனர்.

செல்வகணபதி எம்.பி., அமைச்சர் சிவகொழுந்து, முன்னாள் அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோரை சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்