பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவிலில் நேற்று முன்தினம் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாப்பட்டது. அதனையொட்டி, உற்சவர் பெருமாள் சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. நேற்று மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள்வெண்ணைத்தாழி கண்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு உறியடி உற்சவம் , உற்சவர் பெருமாள் வீதியுலா நடந்தது.
விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.