வழித்துணை விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசை



காஞ்சிபுரம்: ஆரியபெரும்பாக்கம், வழித்துணை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடந்தது.

காஞ்சிபுரம் அடுத்த ஆரியபெரும்பாக்கம் கிராமத்தில், வழித்துணை விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கிராமத்தினர் முடிவு செய்தனர்.

அதன்படி, கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன.

கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று காலை 8:15 மணிக்கு மூலவர் மற்றும் விமான கலசங்கள் புறப்பாடு நடந்தன.

தொடர்ந்து, கோபுர விமான கலசத்திற்கும், மூலவருக்கும் வேதவிற்பன்னர்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். மஹா அபிஷேகமும், மஹா தீப ஆராதனையும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்