வானுார்: வானுார் அடுத்த ஆன்பாக்கம் சுந்தர விநாயகர், முத்துமாரியம்மன், சுப்ரமணியர், எல்லை காளியம்மன், எல்லையம்மன், ஐயனாரப்பன், வீரனார் கோவில் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு இன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.
கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று முன்தினம் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.
தொடர்ந்து நேற்று காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 4:00 மணிக்கு மூன்றாம் காலயாகசாலை பூஜையும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று 7ம் தேதி காலை 5:00 மணிக்கு மேல் நான்காம் கால யாகசாலை பூஜையும், 6:00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் சுந்தர விநாயகர், எல்லை காளியம்மன், எல்லையம்மன் கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகமும், 9:00 மணிக்கு மேல் சுப்ரமணியர், ஐயனாரப்பன், வீரனார், முத்துமாரியம்மன் கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகமும் வெகு விமரிசையாக நடந்தது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துள்ளனர்.