மானாமதுரை: மானாமதுரை அருகே அரிமண்டபம் ராஜாக்கள் குடியிருப்பில் முளைப்பாரி உற்ஸவம் நடைபெற்றது. இங்குள்ள சுந்தரவல்லி அய்யனார் கோவிலில் காப்பு கட்டுதலுடன் முளைப்பாரி உற்ஸவ விழா துவங்கியது. பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதம் துவக்கினர். பெண்கள் முளைப்பாரி ஏந்தி வந்து கோயில் முன் கும்மி பாடியும், ஒயிலாட்டம் ஆடியும் அம்மனை வழிபட்டனர். பாரம்பரிய முறைப்படி சுந்தரவல்லி, அய்யனாருக்கு 9 மண் சட்டிகளில் படையல் வைத்து வழிபட்டனர். பெண்கள் முளைப்பாரி ஏந்தி கோயிலில் இருந்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று கண்மாயில் கரைத்தனர்.