திருவந்திபுரத்தில் தேசிகர் பிரம்மோற்சவ தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்



கடலுார்: கடலுார், திருவந்திபுரத்தில் தேசிகர் பிரம்மோற்சவ விழாவில் நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் சதரிசனம் செய்தனர். 


கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஸ்ரீமந் நிகமாந்த மகா தேசிகர் சுவாமி சன்னதியில் பிரம்மோற்சவ விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவு வீதியுலா நடந்து வருகிறது. முக்கிய விழாவாக இன்று காலை, மகா தேசிகர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளச் செய்து, தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை (22ம் தேதி) காலை 5:00 மணிக்கு ரத்தினாங்கி சேவை, 7:00 மணிக்கு மங்களாசாசனம், 10:00 மணிக்கு வீதியுலா, தீர்த்தவாரி, தேவநாதன், ேஹமாம்புஜநாயகி தாயார் தேசிகர் சன்னதிக்கு எழுந்தருளி சாற்றுமுறை, இரவு 8:00 மணிக்கு கண்ணாடி பல்லக்கில் வீதியுலா நடக்கிறது. நாளை 23ம் தேதி காலை 8:00 மணிக்கு தங்க பல்லக்கில் வீதியுலா, இரவு 8:00 மணிக்கு தெப்பல் உற்சவம் நடக்கிறது. 


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்