காரமடை கோவிலில் ரூ.24 லட்சம் பக்தர்கள் உண்டியல் காணிக்கை



பகிர்க copied

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், 11 உண்டியல்களில் இருந்த பக்தர்களின் காணிக்கைகள் எண்ணியதில், 24 லட்சத்து, 21 ஆயிரத்து, 609 ரூபாய் இருந்தது.


காரமடை அரங்கநாதர் கோவிலில், மூன்று மாதங்களுக்கு, ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணுவது வழக்கம். இன்று கோவிலில் இருந்த,11 உண்டியல்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டன. ஹிந்து சமய அறநிலையத் துறை கோவை உதவி கமிஷனர் உஷா நந்தினி தலைமையில், கோவில் செயல் அலுவலர் முத்துசாமி, கோவில்களின் இன்ஸ்பெக்டர் ஹேமலதா ஆகியோர் முன்னிலையில், கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள், பக்தர்கள் ஆகியோர் காணிக்கைகள் எண்ணும் பணிகளில் ஈடுபட்டனர். இதில், 24 லட்சத்து, 21 ஆயிரத்து, 609 ரூபாயும், தங்கம், 63 கிராம், வெள்ளி, 48 கிராம் பக்தர்கள் காணிக்கை இருந்தது. புரட்டாசி சனிக்கிழமைகளில், இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி உண்டியல் வைப்பது வழக்கம். காலையில் வைத்த இந்த உண்டியல் காணிக்கையை, மாலையில் எண்ணப்படும். கடந்த சனிக்கிழமை புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை. அன்று காரமடை அரங்கநாதர் கோவிலில் வைத்த திருப்பதி உண்டியலில், இரண்டு லட்சத்து, 88 ஆயிரத்து, 422 ரூபாய் காணிக்கை இருந்தது.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்