திருமலை அலிபிரி நடைபாதையில் சிறுத்தை நடமாட்டம்



பகிர்க copied

திருப்பதி; திருமலை அலிபிரி நடைபாதையில் சிறுத்தை நடமாட்டம் கண்டு பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். 2754-வது படிக்கட்டுக்கு அருகே மரத்தின் மீது  சிறுத்தை அமர்ந்திருந்ததை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வீடியோ காட்சியில் சிறுத்தை  சுற்றி வருவதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் பக்தர்களை தொடர்ந்து எச்சரிக்கை செய்து பாதுகாப்பு கருதி பக்தர்களைக் குழுக்களாக அனுப்பி வருகின்றனர். சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பக்தர்கள் தனித்தனியாக செல்வதை தவீர்த்து கூட்டமாக செல்ல வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்