சிவகங்கை; நாட்டரசன்கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரமோத்ஸவ விழா தேரோட்டம் நடந்தது. இக்கோயிலில் புரட்டாசி பிரமோத்ஸவ விழா செப்., 15 அன்று காலை 11:40 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை காலசந்தி ஹோமம், சுவாமி புறப்பாடு நடந்தது. தினமும் இரவு 7:00 மணிக்கு சீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதி பெருமாள் வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.
இன்று காலை 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதி பெருமாள் எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. நாளை காலை கண்ணுடையநாயகி அம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. நாளை இரவு 7:00 மணிக்கு கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. தேவஸ்தான கண்காணிப்பாளர் கணபதிராமன், கவுரவ கண்காணிப்பாளர் நாராயணன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.