காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை விஜயம்



பகிர்க copied

மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 மணிக்கு சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் உள்ள மடத்திற்கு வரும் சுவாமிகள் அன்று இரவு தேனுார் சுப்ரஜா வளாகத்தில் தங்குகிறார். மறுநாள் மதுரை பெசன்ட் ரோட்டில் உள்ள காஞ்சி மடத்திற்கு வருகை தரும் சுவாமிகள் செப்.28, 29,30 அங்கு தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். அக்.1 மதுரையிலிருந்து மேலுார் செல்கிறார். சுவாமிகள் வருகைக்கான ஏற்பாடுகளை மடத்தின் வரவேற்பு கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்