தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள 12 நிரந்தர உண்டியல்கள், கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் உள்ள 2 உண்டியல்கள், ஒரு திருப்பணி உண்டியல் உட்பட 15 உண்டியல்கள் எண்ணும் பணி நேற்று நடந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திண்டுக்கல் ஹிந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் நாகவேல் தலைமையில் நடந்தது. ஆய்வாளர் கார்த்திகேயன், கோயில் செயல் அலுவலர் சுபிதா முன்னிலை வகித்தனர். காணிக்கை எண்ணும் பணியில் கல்லுாரி மாணவிகள், மகளிர் சுய உதவி குழுவினர், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். காணிக்கையாக ரூ. 16.09 லட்சம் ரொக்கமும், 33.5 கிராம் தங்கம், 217.26 கிராம் வெள்ளி இருந்தது. காணிக்கை எண்ணும் பணியை கோயில் மேலாளர் பழனியப்பன் ஒருங்கிணைத்தார். தக்கார் பிரதிநிதி கோமுல்சாமி பங்கேற்றார்.