திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் மற்றும் வீரராகவப்பெருமாள் கோவில்களில், நேற்று உண்டியல் திறக்கப்பட்டது.
வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் உதவி கமிஷனர் பிரபாகரன், செயல் அலுவலர் வனராஜா முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டன. விஸ்வேஸ்வரர் கோவிலில், ஐந்து உண்டியல்களும், வீரராகவப்பெருமாள் கோவிலில், மூன்று உண்டியல்களும் திறக்கப்பட்டன.
பக்தர் அமைப்பினர், ரூபாய் நோட்டு, நாணயங்களை பிரித்து எண்ணினர். தங்கம், வெள்ளி தனியே எடைபார்த்து கணக்கிடப்பட்டது. கணக்கு சரிபார்த்து, உடனுக்குடன், வங்கி கணக்கில் டிபாசிட் செய்யப்பட்டது,
பெருமாள் கோவிலில், 5.12 லட்சம் ரூபாய், 5 கிராம் தங்கம் மற்றும் 61 கிராம் வெள்ளி, விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், 3.39 லட்சம் ரூபாய், 18 கிராம் தங்கம் மற்றும் 91 கிராம் வெள்ளி ஆகியவற்றை, பக்தர்களின் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்ததாக, செயல் அலுவலர் தெரிவித்தார்.