மதுரை சேவுக பெருமாள் வெங்கடாஜலபதி கோயிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா



பகிர்க copied

மதுரை; ஸ்ரீசேவுக பெருமாள் வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது.


மதுரை அண்ணா நகர் ஆலமரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சேவுகப் பெருமாள் அய்யனார் திருக்கோயில் அருள்மிகு வெங்கடாஜலபதி புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது பத்து நாள்  பிரம்மோற்சவ விழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி இரவு நகர்வலம் வந்து சிறப்பாக நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக ரதோத்ஸவம் விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இத்திருவிழாவில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிந்தா கோஷம் முழுங்க கோவிலை சுற்றியுள்ள பகுதியில் தேர் உலா சென்றது. அப்பகுதியில் உள்ள பொது மக்கள் பெருமாளை பயபக்தியுடன் வழிபாடு செய்தனர். விழா நிறைவாக பொதுமக்களுக்கு  பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்