இலுப்பக்குடி விநாயகர் கோயிலில் கல்வெட்டு கண்டுபிடிப்பு



பகிர்க copied

சிவகங்கை; காரைக்குடி அருகே இலுப்பக்குடியில் 1,839 ம் ஆண்டில் விநாயகர் கோயில் பிரதிஷ்டை மற்றும் ஊருணி வெட்டியது குறித்த கல்வெட்டினை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.  சுயம்பிரகாசேஸ்வரர் கோயிலுக்கு அருகே காட்டுப்பகுதியில் 1,839 ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் கோயில் மற்றும் கோயில் முன் ஊருணி துார்வாரியதற்கான கல்வெட்டை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இக்கோயிலை மண்டூரணி விநாயகர் கோயில் என அழைக்கின்றனர். கல்வெட்டு ஆய்வாளர்கள் ராமநாதன், ராஜேந்திரன் கூறியதாவது: இங்குள்ள மண்டூரணி விநாயகர் கோயில் ராஜகோபுர நுழைவு வாயிலின் மேற்பகுதியில் 1839 ம் ஆண்டைய கல்வெட்டு இருப்பதை கண்டறிந்தோம். இதில் விநாயகர் கோயில் கும்பாபிேஷகம், மன்று அய்யனார் கோயிலுக்கு 1839 மே 23 ம் தேதி ஊருணியும் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள சுயம்பிரகாசேஸ்வரர் கோயில் 1842 ல் கட்டப்பட்டு, கும்பாபிேஷகம் நடந்துள்ளது. மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கட்டியுள்ளனர். மதில் சுவர் சுற்றிலும் செம்பறாங்கற்கள் மற்றும் வெள்ளை சலவை கற்கள் கொண்டு கட்டியுள்ளனர். பழமையான நகர கோயிலாக இருந்துள்ளது. கோயில் முன் உள்ள இரண்டு துாண்களில் கோயில் திருப்பணி செய்த நகரத்தாரின் சிலைகள் புடைப்பு சிற்பமாக வடித்துள்ளனர். நகரத்தார்கள் வாழ்ந்த 96 ஊர்களில் இலுப்பக்குடியும் ஒன்று என அறிய முடிகிறது என்றனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்