பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது.
இயற்கை வளம் செழிக்கவும், மழை பெய்ய வேண்டியும் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், கஞ்சிகலய ஊர்வலம் பொள்ளாச்சியில் நடந்தது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் இருந்து கஞ்சிகலய ஊர்வலத்தை, எம்.எல்.ஏ., நித்தியானந்தன் துவக்கி வைத்தார். இதில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஊர்வலத்தில், முளைப்பாரி, கஞ்சிகலயங்கள், கிராமிய இசை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. ஊர்வலமாக சென்று பொள்ளாச்சி மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தை அடைந்தனர். தொடர்ந்து மன்றத்தில் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், இதற்கான ஏற்பாடுகளை பொள்ளாச்சி மன்ற தலைவர் மணி, சக்தி மெடிக்கல் கேர் நிர்வாகி திருநாவுக்கரசு ஆகியோர் செய்தனர்.