மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் விஜயதசமி விழா: அம்பு சேர்வை



பகிர்க copied

மருதமலை: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், விஜயதசமி விழாவையொட்டி, அம்பு சேர்வை நடந்தது.


முருகனின் ஏழாம் படைவீராக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கருதப்படுகிறது. இக்கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, அக்., 11ம் தேதி, விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி அடங்கிய கொலு வைக்கப்பட்டது. நாள்தோறும் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வந்தது. நவராத்திரி விழாவின், நிறைவான விஜயதசமியான இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி தங்க கவசம் அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து, பகல், 12:00 மணிக்கு, விஜயதசமி விழாவின் முக்கிய நிகழ்வாக, சுப்பிரமணிய சுவாமி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி, கோயிலை சுற்றி வந்து, வன்னி மரமாக இருந்த மகிஷாசுரனை அம்பு எய்தி அழித்த, அம்பு சேர்வை நிகழ்ச்சி நடந்தது. இதில், கோவில் தக்கார் ஜெயகுமார், துணை கமிஷனர் விமலா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்