திருப்பதி பிரம்மோற்சவம்: அஸ்வ வாகனத்தில் கல்கி கோலத்தில் அருள்பாலித்த மலையப்ப சுவாமி!



பகிர்க copied

திருமலை: திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி அஸ்வ வாகனத்தில் கல்கி அவதாரக் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


மங்கள இசை, பக்திப் பாடல்கள், கோலாட்டம், யானைகளின் அணிவகுப்பு ஆகியவற்றுடன் நடைபெற்ற வாகன சேவையில், பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமியை வழிபட்டனர். 


அஸ்வ வாகனத்தின் தத்துவம்: குதிரை வேகம், வலிமை மற்றும் ஆற்றலின் அடையாளமாக விளங்குகிறது. மனிதன் தனது ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி, தர்ம நெறியில் வாழ வேண்டும் என்பதையே அஸ்வ வாகன சேவை உணர்த்துகிறது. கல்கி அவதாரத்தின் சிறப்பு: கலியுகத்தில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட திருமால் எடுக்கவிருக்கும் அவதாரமாகக் கல்கி அவதாரம் போற்றப்படுகிறது. இறைவனின் திருநாமத்தைப் போற்றி, தர்ம வழியில் நடப்பதன் அவசியத்தை இந்த வாகன சேவை பக்தர்களுக்கு உணர்த்தியது. இந்த நிகழ்வில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், தேவஸ்தானத் தலைவர் பி.ஆர். நாயுடு, செயல் அலுவலர் முத்தடா ரவிச்சந்திரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்